Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமர்நாத் யாத்திரை தொடங்கியது

ஸ்ரீநகர்: இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரையை 4603 பேர் அடங்கிய முதல் குழுவினர் நேற்று அதிகாலை தொடங்கினார்கள். தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3880மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோயிலில் ஆண்டு தோறும் தானாக உருவாகும் பனிலிங்கத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை நேற்று அதிகாலை தொடங்கியது. பால்டால் மற்றும் நுன்வானில் உள்ள அடிவார முகாம்களில் இருந்து முதல் குழுவினர் யாத்திரைக்கு புறப்பட்டு சென்றனர்.

ஜம்முவின் பகவதி நகரில் உள்ள 4603 பேர் அடங்கிய முதல் குழுவினரின் அமர்நாத் யாத்திரையை லெப்டினன்ட கவர்னர் மனோஜ் சின்ஹா நேற்று முன்தினம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிலையில் பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து 1881 பக்தர்கள் கொண்ட இரண்டாவது குழு நேற்று அதிகாலை புறப்பட்டு சென்றது. 427 பெண்கள், 294 யாத்ரீகர்கள் 200 வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். பால்டால் வழியாக 1069 பேரும், பாஹல்காம் வழியாக 812 பக்தர்களும் சென்றுள்ளனர். கடந்த ஆண்டு 4.5லட்சத்துக்கும் அதிகமானோர் பனிலிங்கத்தை தரிசனம் செய்தனர்.