Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அதிமுகவுக்கு மூடுவிழா: டிடிவி

புதுக்கோட்டை: அமமுக தலைவர் டிடிவி தினகரன் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதுதான் எல்லோரது விருப்பமும். அதுதான் எனது விருப்பமும். பணவெறி, அகம்பாவம், பதவி வெறி பிடித்த எடப்பாடி பழனிச்சாமியின் சுயநலத்தால் அதிமுக அழிந்து வருகிறது. இரட்டை இலை சின்னம், ஜெயலலிதா கட்சி என தொண்டர்கள், நிர்வாகிகள் நினைத்து மவுனமாக இருந்தால் பாராளுமன்ற தேர்தலில் மூன்றாம் இடம் கிடைத்தது. வரும் 2026 தேர்தலில் பழனிச்சாமி தலைமையில் படுதோல்வி அடைந்து, அதிமுக மூடு விழா நடத்தும் நிலைமையில் தான் உள்ளது. அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைந்து ஜெயலலிதா ஆட்சி மீண்டும் தொடர்ந்திட முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.