இன்று இந்தியா-நேபாள எல்லை பேச்சுவார்த்தை
புதுடெல்லி: இந்தியாவின் சஷாஸ்தி சீமா பால் மற்றும் நேபாளத்தின் ஆயுதக் காவல் படை ஆகியவற்றின் உயர்மட்டக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. 9வது ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
எல்லைத்தாண்டிய குற்றங்களை தடுப்பதற்கான பயனுள்ள வழிமுறைகளை உருவாக்குதல், நிகழ்நேர தகவல் பகிர்வுக்கான வேகமான மற்றும் திறமையான நடவடிக்கைகளை நிறுவுதல் மற்றும் இந்திய-நேபாள எல்லையில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை நடைமுறைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு படைகளுக்கும் இடையிலான கடைசி சந்திப்பு கடந்த ஆண்டு நவம்பரில் காத்மண்டுவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement