Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

இந்தியாவுடன் கடற்பயிற்சியில் ஈடுபட்ட 2வது ஈரான் போர்க்கப்பலில் இன்ஜின் கோளாறு: கப்பலில் இருந்த 204 வீரர்களை இலங்கை மீட்டது

கொழும்பு: கடந்த மாதம் விசாகப்பட்டினத்தில் நடந்த மிலன் 2026 என்ற சர்வதேச கடற்படை பயிற்சியில் பங்கேற்று விட்டு ஈரானை சேர்ந்த கடற்படை போர் கப்பல் ஐஆர்ஐஎஸ் தேனா கடந்த 4ம் தேதி காலையில் இலங்கைக்கு அருகே கடலில் சென்று கொண்டிருந்தது. அப்போது அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் மூலம் தாக்குதலுக்கு உள்ளாகி கடலில் மூழ்கியது.

இதில் 87 வீரர்கள் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயமடைந்தனர். மீதம் உள்ள 61 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் நடந்த கடற்பயிற்சியில் பங்கேற்று விட்டு ஈரானின் இன்னொரு போர் கப்பல் ஐஆர்ஐஎஸ் புஷேர் நேற்றுமுன்தினம் கொழும்பு அருகே வந்த போது அதன் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஈரான் கப்பல் இலங்கையில் நுழைய அனுமதி கேட்டிருந்தது. அந்த கப்பல் இலங்கை கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில் புஷேர் கப்பலில் இருந்த 204 பேர் மீட்கப்பட்டு கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.