Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
DMK MK Stalin
search-icon-img
Advertisement

நாடாளுமன்ற தேர்தல்: இந்தியா கூட்டணி தொடர்ந்து முன்னிலை: பாஜகவுக்கு பின்னடைவு

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. கருத்துக்கணிப்பு முடிவுகளை விட இந்தியா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி தமிழ்நாடு, கேரளா, மராட்டியம், உ.பி., மேற்குவங்கம், பஞ்சாப் மாநிலங்களில் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.

மராட்டியத்தில் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மராட்டியத்தில் பாஜக கூட்டணி 21 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 38 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஹரியானா மாநிலத்திலும் அதிக இடங்களைக் கைப்பற்றுகிறது காங்கிரஸ்.