Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று துவக்கம்

துபாய்: 10வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் (டி.20) இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. ஏ பிரிவில் 7 முறை சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங், தாய்லாந்து, பி பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்கதேசம், யுஏஇ, இந்தோனேசியா இடம் பெற்றுள்ளது.

லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். இதில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இன்று இரவு 8 மணிக்கு முதல் போட்டியில் ஏ பிரிவில் ஹாங்காங்-தாய்லாந்து மோதுகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் நாளை மறுநாள் தாய்லாந்து, செப். 3ம் தேதி ஹாங்காங், 5ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.