Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியா-அமெரிக்கா இணைந்து தயாரித்த தொலை தொடர்பு செயற்கைகோள் மார்க்-3 மூலம் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

நாகர்கோவில்: இந்தியா-அமெரிக்கா சேர்ந்து இணைந்து தொலை தொடர்பு செயற்கைகோள் மார்க் -3 மூலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். இஸ்ரோ தலைவர் நாராயணன், நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இஸ்ரோவில் 2025ல் நிறைய சாதனைகள் நடந்துகொண்டிருக்கின்றன. 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் லிக்யூட் ஆக்ஸிஜன் மீத்தேனை வைத்து இயங்கும் மார்க்-3 ராக்கெட்டை நிலவுக்கு அனுப்பும் திட்டம் இருக்கிறது. அதன் மூலம் மார்க் -3 ராக்கெட் 4000 கிலோ எடையுள்ள செயற்கைகோளை ஆர்பிட்டுக்கு கொண்டு செல்ல முடியும். சுனிதா வில்லியம்ஸ் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.

சுனிதா வில்லியம்சுக்கு ஏற்பட்ட சிக்கலை நாம் படித்து வருகிறோம். வரும் மே மாதம் பி.எஸ்.எல்.வி 61-வது ராக்கெட்டை அனுப்ப இருக்கிறோம். மேலும் இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து செய்த தொலை தொடர்பு செயற்கைகோளை மார்க் -3 மூலம் ஜூலை மாதம் விண்ணில் அனுப்ப உள்ளோம். மகேந்திரகிரியில் நிறைய பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. முன்பு இஸ்ரோ மட்டுமே இந்திய விண்வெளிக்கான எல்லா வேலைகளையும் செய்து வந்தது.

இப்போது ராக்கெட் தயாரித்தல், சாப்ட்வேர் உருவாக்குதல் போன்றவற்றை ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, இளைஞர்கள், கல்லூரி பேராசிரியர்கள், தனியார் நிறுவனங்கள் என யார் வேண்டுமானாலும் செய்யலாம். அவர்களுக்கு இஸ்ரோ தேவையான உதவிகளை செய்து, ஊக்குவிக்குவித்து வருகிறது. கன்னியாகுமரி சன் செட் பாயின் அருகே விண்வெளி பூங்கா அமைக்க உள்ளோம். அதற்கான நிலம் தமிழக அரசு ஒதுக்கீடு செய்து இருக்கிறது. குலசேகரபட்டணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 95 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விட்டன. இன்னும் 2 ஆண்டுகளுக்குள் குலசேகரபட்டிணத்தில் இருந்து ராக்கெட் விண்ணுக்கு புறப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* மண்ணெண்ணெய் மூலம் இயங்கும் ராக்கெட் இன்ஜின்

இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறுகையில், ‘நம்மிடம் திரவ ராக்கெட் இன்ஜினில் பெரிய திறன் இன்ஜின் என்பது விகாஷ் இன்ஜின் ஆகும். இப்போது திரவ ஆக்சிஜனையும், மண்ணெண்ணெய்யையும் வைத்து 200 டன் திறன் உள்ள செமிக்ரோ இன்ஜினை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக மகேந்திரகிரியில் ரூ.1000 கோடி மதிப்பில் சோதனை கூடம் ஒன்றை பிரதமர் மோடி கடந்த ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணித்தார். புதிதாக உருவாக்கம் செய்த இன்ஜின் பவர் ஹெட் வெற்றிகரமாக செய்து இருக்கிறோம். இது பெரிய சாதனையாகும். அதில் சில சோதனைகள் முடிக்கப்பட வேண்டி உள்ளன’ என்றார்.