Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அமெரிக்காவின் ‘ஜேவலின்’ ரக டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து

டெல்லி: அமெரிக்காவின் ‘ஜேவலின்’ ரக டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. RTX மற்றும் Lockheed Martin நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த நவீன ஏவுகணைகள், எதிரிகளின் டேங்குகள் மற்றும் கவச வாகனங்களை அழிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ஒட்டுமொத்த பாதுகாப்பு தொகுப்பின் மதிப்பு சுமார் 93 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.825 கோடி) ஆகும். அவசர கால கொள்முதல் திட்டத்தின் கீழ், இந்திய ராணுவம் 104 ஜேவலின் ஏவுகணைகளையும் 12 லாஞ்சர்களையும் (Launchers) வாங்க திட்டமிட்டுள்ளது.

இந்த ஏவுகணை கொள்முதல் ஒப்பந்தம், எதிர்காலத்தில் இந்தியாவிலேயே இந்த ஏவுகணைகளை இருநாடுகளும் இணைந்து தயாரிப்பதற்கான (Co-production) வாய்ப்புகளையும் ஏற்படுத்தும் என அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார். இந்த நவீன ஜேவலின் ஏவுகணைகள் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin) மற்றும் ஆர்டிஎக்ஸ் (RTX) நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்படுபவை ஆகும்.

ஜேவலின் என்பது மனிதர்கள் எளிதில் தூக்கிச் சென்று இலக்குகளைத் தாக்கக்கூடிய (Portable) ஒரு அதிநவீன பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பாகும்.இது எல்லையோரப் பகுதிகளில் இந்தியாவின் பாதுகாப்புத் திறனை நவீனப்படுத்தவும், பிராந்திய அச்சுறுத்தல்களை திறம்பட எதிர்கொள்ளவும் இந்திய ராணுவத்திற்கு பெரும் பலம் சேர்க்கும்