தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாக்கு சதவீதத்தை அதிகரிக்க இந்தியாவுக்கான ரூ.180 கோடி நிதியை நிறுத்திய அமெரிக்கா: தேர்தலில் அந்நிய தலையீடு? என பாஜ குற்றச்சாட்டு

Advertisement

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது நிர்வாகத்தில், அரசின் செயல்திறனை அதிகரிக்கவும், செலவினங்களை குறைக்கவும் தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் செயல்திறன் குழுவை அமைத்துள்ளார். இக்குழு நிதி உதவி தொடர்பாக பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா அளித்து வந்த ரூ.180 கோடி நிதியை ரத்து செய்து எலான் மஸ்க் நேற்று அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் தேர்தல் மற்றும் அரசியல் செயல்முறையை வலுப்படுத்தும் அமைப்புகளுக்கு 486 மில்லியன் டாலர் நிதி உதவியை அமெரிக்கா வழங்கி வந்தது. இதில் இந்தியாவுக்கு வழங்கி வந்த 21 மில்லியன் டாலர் (ரூ.180 கோடி) நிதியை நிறுத்துவதாக மஸ்க் அறிவித்துள்ளார். இந்த நிதி உதவி மூலம் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரசின் அமைப்பு இந்திய தேர்தலில் தலையிட்டதாக காங்கிரஸ் மீது பாஜ குற்றம்சாட்டியிருக்கிறது.

பாஜவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மாள்வியா தனது எக்ஸ் பதிவில், ‘‘காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி இந்தியாவை பலவீனப்படுத்த முயற்சிக்கும், நாட்டின் நலன்களுக்கு எதிரான சக்திகள், இந்திய நிறுவனங்களுள் ஊடுருவுவதற்கு உதவியது தெளிவாகிறது. வாக்கு சதவீதம் அதிகரிப்புக்கு ரூ.180 கோடி பெற்றது யார்? இது நிச்சயமாக இந்தியாவின் தேர்தல் செயல்பாட்டில் அந்நிய தலையீடு. இதனால் யாருக்கு லாபம்? நிச்சயம் ஆளுங்கட்சிக்கு அல்ல’’ என கூறி உள்ளார்.

Advertisement