Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவுக்கு வாய்ப்பு?.. பாகிஸ்தான் மருந்து இறக்குமதிக்குத் தடை விதித்து தாலிபான் அரசு அதிரடி!!

தாலிபான்: கடந்த மாதம் முதலே ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் போக்கு தீவிரம் அடைந்து வருகிறது. எல்லை பிரச்சனையால் உருவான இந்த மோதலில் கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலால் இன்னும் தீவிரம் அடைந்தது. சில நாட்கள் நடந்த மோதல் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் தலையிட்டால் ஒப்பந்த அடிப்படையில் முடிவுக்கு வந்தது. இருப்பினும் இருநாடுகளுக்கு இடையான உறவில் விரிசல் அதிகரித்து கொண்டு தான் வருகிறது.

அதன் நீட்சியாக பாகிஸ்தானில் இருந்து மருந்துகள் இறக்குமதி செய்யவதை நிறுத்த வேண்டும் என தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலில் உள்ள தாலிபான் அரசாங்கம் தங்கள் நாட்டு வர்த்தகர்கள், பாகிஸ்தானில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு ஆப்கானிஸ்தான் வர்த்தகர்களுக்கு தாலிபான் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உங்களுக்கு மூன்று மாதங்கள் காலக்கேடு உள்ளது. அதன் பிறகு பாக்கிஸ்தானில் இருந்து வரும் எந்த மருந்துகளுக்கும் அனுமதி வழங்கமாட்டோம் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார விவகாரங்களுக்கான துணை பிரதமர் முல்லா அப்துல் கனி பரதர் இது குறித்து பேசும்போது பாகிஸ்தானின் மருந்துகளின் தரம் குறைவாக இருப்பது ஆப்கானிஸ்தானில் சுகாதாரத்துறையில் ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் வர்த்தகம் வரிகளை மூடுவதால் வர்த்தகர்கள் பெரும் நீதி இழப்பு சந்திப்பதாகவும் குற்றம் சட்டியிருக்கிறார். ஆப்கானிஸ்தான் வர்த்தகர்கள் பாகிஸ்தானுக்கு பதிலாக மாற்று விநியோக வழிகளை தேடவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த தடையை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் வர்த்தகர்கள் இனி இந்தியாவில் இருந்து மருந்துகளை பேர அதிக வாய்ப்புள்ளது. பாக்கிஸ்தான் தவிர ஆப்கானிஸ்தான் மருந்து வழங்கும் முக்கிய நாடுகளில் இந்திய ஒன்றாகும். இந்த நடவடிக்கை அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே ஆனா வர்த்தகம் மற்றும் அரசியல் உறவுகளின் ஆழத்தை காட்டுவதாக அமைந்துள்ளது.