Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

இந்தியா-பாகிஸ்தான் எல்லையருகே ராஜஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு

ஜெய்பூர்: ராஜஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் 50 ஜிபி என்ற கிராமம் உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் எல்லையருகே உள்ள இந்த கிராமத்தில் அனுப்கர் சூரத் ரயில் பாதையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு அனுப்கரில் இருந்து சூரத்கர் நோக்கி பயணிகள் ரயில் சென்றது. இது சென்ற 45 நிமிடங்களுக்கு பிறகு, 9.45 மணிக்கு குண்டு வெடித்துள்ளது. இதன் காரணமாக தண்டவாளத்தை தாங்கும் 2 சிமென்ட் ஸ்லீப்பர்கள் பலத்த சேதமடைந்தன. மேலும் தண்டவாளத்தின் கீழ் சுமார் 2 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது.

குண்டு வெடித்த சத்தம் 200 மீட்டர் தொலைவில் வசிக்கும் மக்களுக்கு கேட்டு, அந்த இடத்தை நோக்கி விரைந்து வந்துள்ளனர். தொடர்ந்து உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தில் அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக அனுப்கர் சூரத்கர் இடையேயான ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.