தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 9வது இடம்!!

டெல்லி: இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 9வது இடத்தில் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் 80,000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசிலின் பெலிமில் நடந்த சிஓபி30 என்ற மாநாட்டில் ஜெர்மன்வாட்ச் என்ற சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனம், 'பருவநிலை அபாய குறியீடு 2026' எனும் தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், 1995 முதல் 2024ம் ஆண்டு வரை நிகழ்ந்த இயற்கை பேரழிவுகளால் 130 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ரூ.15,000 கோடியளவுக்கான சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

Advertisement

கடந்த 30 ஆண்டுகளில் இயற்கை பேரிடர்கள் அதிகம் பாதித்த நாடாக டொமினிகா உள்ளது. அதைத் தொடர்ந்து மியான்மர், ஹோண்டுராஸ், லிபியா, ஹைட்டி, கிரெனடா, பிலிப்பைன்ஸ், நிகரகுவா நாடுகளுக்கு அடுத்ததாக, 9வது இடத்தில் இந்தியாவும், 10வது இடத்தில் பஹாமாஸ் நாடுகளும் உள்ளன. இந்தியாவில் மட்டும் கடந்த 30 ஆண்டுகளில் 430 இயற்கை பேரிடர்களில் சிக்கி 80,000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1998ம் ஆண்டு குஜராத் புயல், 1999ல் ஒடிசா சூப்பர் புயல், 2013ல் உத்தரகண்ட் வெள்ளபாதிப்பு உள்ளிட்டவை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளன.2024ம் ஆண்டில் மட்டும் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement