Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

முன்னெப்போதையும் விட இந்தியாவுடனான ஒத்துழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகி வருகிறது - ஜப்பான் பிரதமர்

டோக்கியோ: சர்வதேச அரசியல் சூழல் தொடர்ந்து நிச்சயமற்றதாக மாறி வருகிறது. இந்த சூழலில் இந்தியா உடனான உறவு முன்னெப்போதையும் விட ஜப்பானுக்கு இப்போது மிக மிக முக்கியம் என அந்நாட்டு பிரதமர் கூறி உள்ளார். ஆசியாவின் முன்னணி ஜனநாயக நாடுகளில் ஒன்றாகத் திகழும் இந்தியாவுக்கு, ஜப்பானுடன் இணைந்து இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநிறுத்துவதில் மிகப்பெரிய கூட்டுப் பொறுப்பு உள்ளதாக ஜப்பான் பிரதமர் Sanae Takaichi கருத்து தெரிவித்துள்ளார்.

ஜப்பானியப் பிரதமர் மூன்று நாள் பயணமாக இன்று மாலை புதுதில்லிக்கு வருகிறார். இவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும். அவர் நாளை பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெறும் 16-வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

பிரதமர் மோடியுடனான தனது பேச்சுவார்த்தைகள் மூன்று முக்கிய முன்னுரிமைகளில் கவனம் செலுத்தும் என்று ஜப்பானியப் பிரதமர் தெரிவித்தார். இருநாடுகள் இடையிலான மூலோபாயக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துதல், பொருளாதாரப் பாதுகாப்பு குறித்த ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் முதலீடு மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்க இரு நாட்டு வணிக நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும் என கூறி உள்ளார்.

இந்த நிலையில் தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ அரசு முறை இந்திய பயணத்திற்கு முன்னதாக இந்த கருத்தை கூறி இருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியா - ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவுகள் நிறுவப்பட்டதன் 75-வது ஆண்டு நிறைவு விழா நெருங்கி வரும் நிலையில் வர்த்தகம் மற்றும் முதலீடு, பொருளாதாரப் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் ராணுவம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் மக்கள் இடையிலான உறவுகள் எனப் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடர்ந்து வலுவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.