Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியா - இந்தோனேசியா உறவில் புதிய மைல்கல்.. 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து..!

ஜகார்த்தா: பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையே பாதுகாப்பு, தொழில்நுட்பம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் 20 முக்கிய ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகியுள்ளன.

இரு நாடுகளின் உறவில் புதிய பொற்காலத்தை உருவாக்கும் நோக்கில் இந்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்தியாவிடமிருந்து பிரமோஸ், அஸ்த்ரா-MK1 ஏவுகணைகளை இந்தோனேசியா வாங்குவது, இந்தோனேசியாவில் 'யுபிஐ' பணப்பரிவர்த்தனை இணைப்பை ஏற்படுத்துவது உள்ளிட்ட 20 முக்கிய ஒப்பந்தங்கள் இரு நாடுகளிடையே கையெழுத்தாகியுள்ளன.

குறிப்பாக இந்திய பெருங்கடல் பகுதியில் இரு நாட்டு கடலோர காவல் படைகளும் இணைந்து பணியாற்றுவதுடன், இந்தோனேசியாவில் பெங்களூரு ஐஐஎம் கல்வி வளாகத்தை திறக்கவும் இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா - இந்தோனேசியா நாடுகளுக்கிடையே கையெழுத்தாகியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தந்தங்கள் இரு நாடுகளின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கண்டவை தவிர சுகாதாரத் துறை உழைப்பாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான தொழில்நுட்ப கட்டமைப்பு ஒப்பந்தம், உயர்தர இந்திய மருந்துகளை இந்தோனேசிய மக்களுக்கு மலிவாகவும் கிடைக்கச் செய்வதற்கான ஒப்பந்தம், இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டு இணையப் பாதுகாப்பு மற்றும் தரவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தம் என மொத்தம் 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.