அ. எக்சிக்யூட்டிவ் டிரெய்னீ (இன்டஸ்டிரியல் மற்றும் பயர் சேப்டி): 10 இடங்கள். சம்பளம்: ரூ.56,100.
வயது: 26க்குள். தகுதி: ஹெல்த் சேப்டி மற்றும் என்விரோன்மென்ட்/பயர் மற்றும் சேப்டி இன்ஜினியரிங்/ இன்டஸ்டிரியல் சேப்டி மற்றும் பயர்/பயர் மற்றும் இன்டஸ்டிரியல் சேப்டி/ இன்டஸ்டிரியல் மற்றும் பயர் சேப்டி/இன்டஸ்டிரியல் மற்றும் பயர் சேப்டி இன்ஜினியரிங்/பயர் மற்றும் இன்டஸ்டிரியல் சேப்டி இன்ஜினியரிங்/ இன்டஸ்டிரியல் சேப்டி இன்ஜினியரிங்/ பயர் டெக்னாலஜி மற்றும் சேப்டி ஆகிய பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்.,
ஆ. எக்சிக்யூட்டிவ் டிரெய்னீ (இயற்பியல்): 20 இடங்கள். வயது: 26க்குள். தகுதி: இயற்பியல்/பயன்பாட்டு இயற்பியல்/ இயற்அறிவியல் ஆகிய பாடங்கள் ஏதாவது ஒன்றில் 60% மதிப்பெண்களுடன் எம்எஸ்சி., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 04.03.2026 தேதியின்படி வயது வரம்பு கணக்கிடப்படும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் பணி வழங்கப்படும். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி வழங்கப்படும். அப்போது மாதம் ரூ.74 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சிக்கு பின்னர் நிரந்தர பணி வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் www.npcilcareers.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று 04.03.2026.
