Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

இந்திய - வங்கதேச எல்லையில் 3 வீரர்கள் மீது கடத்தல் கும்பல் கொடூர தாக்குதல்: துப்பாக்கிகளை பறிக்க முயன்றதால் பரபரப்பு

அகர்தலா: திரிபுராவில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை தாக்கி துப்பாக்கியை பறிக்க முயன்ற கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவனை பிடித்து பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியா மற்றும் வங்கதேச எல்லைப்பகுதியில் தொடர்ந்து சமூக விரோதிகளின் சட்டவிரோத கடத்தல் சம்பவங்கள் தலைதூக்கி வந்தன. இந்த நிலையில், திரிபுரா மாநிலம் போக்சாநகர் பகுதியில் உள்ள ஆஷாபாரியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது எல்லை வழியாக ஊடுருவிய சட்டவிரோத கடத்தல் கும்பல், திடீரென எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 3 வீரர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. மேலும் அந்த துணிகர கும்பல் அரசு வாகனத்தை அடித்து நொறுக்கி, வீரர்களின் துப்பாக்கிகளை பறிக்கவும் வெறித்தனமாக முயற்சி செய்தது. உடனே சுதாரித்துக் கொண்ட வீரர்கள் அந்த கும்பலை விரட்டியடித்ததில், சம்பவ இடத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் பதுங்கியிருந்த ஹெப்சுர் ரஹ்மான் என்ற கடத்தல்காரனை சுற்றி வளைத்து பிடித்தனர்.

இந்த வன்முறை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த மாநில முதல்வர் மாணிக் சாகா, ‘எங்கள் துணிச்சல் மிக்க வீரர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த குற்றவாளிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது’ என்று எச்சரித்துள்ளார்.