1. லெப்டினென்ட் (இந்தியன் மிலிட்டரி அகடமி): 100 இடங்கள். வயது: 02.01.2003க்கும் 1.1.2008க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும். தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. லெப்டினென்ட் (இந்தியன் நேவல் அகடமி): 26 இடங்கள். வயது: 02.01.2003க்கும், 1.1.2008க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும். தகுதி: இன்ஜினியரிங் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3. லெப்டினென்ட் (ஏர்போர்ட்ஸ் அகடமி): 32 இடங்கள். வயது: 20 முதல் 24க்குள். தகுதி: இயற்பியல், கணிதம் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
4. லெப்டினென்ட் (ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகடமி- எஸ்எஸ்சி (ஆண்கள்): 275 இடங்கள். வயது: 02.01.2002க்கும், 1.1.2008க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும். தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
5. லெப்டினென்ட் (ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகடமி எஸ்எஸ்சி (பெண்): 18 இடங்கள். வயது: 2.1.2002க்கும் 1.1.2008க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும். தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (Combined Defence Services Examination) மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் ஒவ்வொரு தவறான பதில்களுக்கும் மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, வேலூர், திருச்சி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மையங்களில் நடைபெறும்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.200/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள் மற்றும் எஸ்சி/எஸ்டியினருக்கு கட்டணம் கிடையாது.
www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.12.2025.


