Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சுதந்திர தினத்தை கண்ணியத்துடனும், பெருமையுடனும் கொண்டாடுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: டெல்லியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் மங்கள் மிலன் கூட்டத்திற்காக பிரதமர் மோடி வந்தபோது அங்கிருந்த எம்பிக்கள் தேசியக்கொடியை அசைத்தும், வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே ஆகிய முழக்கங்களை எழுப்பியும் அவரை வரவேற்றனர். பிரதமரும் பதிலுக்குத் தேசியக் கொடியை கையில் ஏந்தி அங்கிருந்த உறுப்பினர்களை நோக்கி அசைத்து அவர்களை வாழ்த்தினார்.

இந்த கூட்டத்தில் பாஜ தலைவர் நிதின்நபின், ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான் மற்றும் ஜெயசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் எம்பிக்களும் கலந்து கொண்டனர். இந்த வீடியோ காட்சியை பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் பிரதமர் மோடி,‘‘நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம். சுதந்திர தினத்தை கண்ணியம், பெருமை மற்றும் சிறப்புடன் நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதிமொழியை ஏற்போம். ‘ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி, ஒவ்வொரு இதயத்திலும் மூவர்ணக்கொடி’ வாருங்கள் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடியை ஏற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.