Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

‘இந்த்’வங்கியில் மேனேஜர்,ஸ்பெஷலிஸ்ட்கள்

பணியிடங்கள் விவரம்:

1. ரிலேஷன்ஷிப் மேனேஜர்: 10 இடங்கள். சம்பளம்: ரூ.4,00,000- ரூ.5,00,000. வயது: 25 லிருந்து 35க்குள். தகுதி: மார்க்கெட்டிங்/ நிதி பிரிவில் எம்பிஏ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஸ்பெஷலிஸ்ட்: 1 இடம். சம்பளம்: ரூ.5,00,000-ரூ.8,00,000. வயது: 26 லிருந்து 40க்குள். தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/ விஷூவல் கம்யூனிகேசன் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. செக்ரட்டரியல் ஆபீசர் (டிரெய்னி பார் பேக் ஆபீஸ்): 1 இடம். வயது வரம்பு: 21 லிருந்து 35க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.3.5 லட்சம். தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. டீலர் (ஸ்டாக் புரோக்கிங் டெர்மினல்ஸ்): 8 இடங்கள். வயது: 21 லிருந்து 35க்குள். சம்பளம்: ரூ.4,20 லட்சம். தகுதி: ஏதொவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indbankonline.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.01.2026.