புதுடெல்லி: சரக்கு போக்குவரத்து, விவசாய இயந்திரங்கள் மற்றும் நீர்பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் இந்தியாவின் மிக முக்கியமான எரிபொருள் டீசல். முக்கிய விதைப்புப் பருவத்தில் சீரற்ற பருவமழை காரணமாக நீர்பாசனத்திற்கான தேவை அதிகரித்தது. இதன் எதிரொலியாக விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் எரிபொருள் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய நாட்டின் மூன்று பொதுத்துறை எரிபொருள் விற்பனை நிறுவனங்களின் பெட்ரோல் விற்பனையானது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்த 3.19மில்லியன் டன்களில் இருந்து 9.1சதவீதம் அதிகரித்து ஆகஸ்ட் மாதத்தில் 3.48மில்லியன் டன்களான உயர்ந்தது.
ஜூலை மாதத்தில் காணப்பட்ட 9.7 சதவீத ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சிக்கு பின்னரே ஆகஸ்ட் மாதத்தில் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளின் முக்கிய குறியீடாக விளங்கும் டீசல் விற்பனையானது, கடந்த ஆண்டின் 5.69 மில்லியன் டன்களில் இருந்து 10.2சதவீதம் அதிகரித்து, ஆகஸ்ட் மாதத்தில் 6.27 மில்லியன் டன்களாக உயர்ந்தது.



