தமிழ்நாட்டில் மறுசீரமைப்பிற்கு முன் 75,032 ஆக இருந்த வாக்குச்சாவடிகள் தற்போது 75,088 ஆக அதிகரிப்பு: அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் மறுசீரமைப்பிற்கு முன் 75,032 ஆக இருந்த வாக்குச்சாவடிகள் தற்போது 75,088 ஆக அதிகரித்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, உரிய சரிபார்ப்புகளுக்குப் பின் இந்த மாற்றம் இறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காகவும், வாக்களிப்பதை எளிமைப்படுத்தவும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி இந்த வாக்குச்சாவடிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.


