மும்பையிலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள ஸ்டெனொகிராபர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆண், பெண் விளையாட்டு வீரர், வீராங்கனைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பெர்சனல்/ஸ்போர்ட்ஸ் ரெக்ரூட்மென்ட்/2025-26.
1. ஸ்டெனொகிராபர் (கிரேடு-2): 12 இடங்கள். சம்பளம்: ரூ.25,500- ரூ.81,100. வயது: 18 முதல் 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் சுருக்கெழுத்து திறன் மற்றும் 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
2. டேக்ஸ் அசிஸ்டென்்ட்: 47 இடங்கள். சம்பளம்: ரூ.25,500- 81,100. வயது: 18 முதல் 27க்குள். தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் ஆங்கிலத்தில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
3. பல்நோக்கு பணியாளர்: 38 இடங்கள். சம்பளம்: ரூ.18,000-56,900. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகள்:
அதலெடிக்ஸ்- 26, நீச்சல்-6, பேட்மிண்டன்-4, டேபிள் டென்னிஸ்-4, செஸ்-4, லான் டென்னிஸ்-4, கிரிக்கெட்-10, கூடைப்பந்து-4, வாலிபால்-5, கபடி-7, கால்பந்து-11, பில்லியர்ட்ஸ்-2, ஸ்குவாஷ்-2, யோகாசனம்-2, பாரா ஸ்போர்ட்ஸ் (செவித்திறன் குறைந்தவர்களுக்கான விளையாட்டு உள்பட)-4, குத்துச்சண்டை-2.
சம்பந்தப்பட்ட விளையாட்டில் ஏதாவதொன்றில் தேசிய/மாநில/பல்கலைக்கழக அளவில் விளையாடி குறைந்தது 3வது இடம் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.200 மட்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.incometaxmumbai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.01.2026.

