Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதித்து சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம் உள்ளது? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதித்து சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம் உள்ளது? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதித்து காவல்துறை டிஜிபி கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பரில் சுற்றறிக்கை பிறப்பித்திருந்தார். இந்நிலையில், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கக் கோரி ஈரோடைச் சேர்ந்த ஆர்.அருண்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களின் போது, ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை, ரேக்ளா பந்தயங்கள் உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளப் பின்பற்றியே தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்தான் சேவல் சண்டை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதோ, சூதாட்ட நோக்கமோ இல்லை. எனவே, சேவல் சண்டைக்கு தடை விதித்து டிஜிபி பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை ரத்து செய்து, சேவல் சண்டை போட்டிகளை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், மிருக வதை தடை சட்டம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளின் அடிப்படையில்தான் இந்த சுற்றிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மனுவுக்கு பதிலளிக்க 2 வார அவகாசம் வழங்க வேண்டும் என கோரப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதித்து சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம் உள்ளது? காவல்துறைக்கு எத்தனையோ பணிகள் இருக்கும்போது, எங்கு ஆடு சண்டை நடக்கிறது, சேவல் சண்டை நடக்கிறது என கண்காணிப்பதுதான் வேலையா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து இந்த மனுவுக்கு பதிலளிக்க டிஜிபி, ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.