முரசு புயல் எதிரொலி - சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 7 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம்!
சென்னை: முரசு புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 7 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் எழுதியுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தபப்ட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை எழுதியுள்ள கடிதத்தில்;
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மேற்கோள் காட்டியுள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் செய்திக்குறிப்பைக் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன், அதில் பின்வருமாறு கன முதல் மிகக் கனமான மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கனமழை எச்சரிக்கை
நாள் 1 (01.11.2026): திருவள்ளூர் மாவட்டத்தில் ஆங்காங்கே கன முதல் மிகக் கனமான மழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாள் 2 (02.11.2026): சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஆங்காங்கே கன முதல் மிகக் கனமான மழை பெய்யும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாள் 3 (03.11.2026): நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
(மிகக் கனமழை: 200 மி.மீ.க்கு மேல், மிகக் கனமழை: 120 மி.மீ. முதல் 200 மி.மீ. வரை, கனமழை: 70 மி.மீ. முதல் 110 மி.மீ. வரை)
2) எனவே, கனமழை முதல் மிகக் கனமழை வரையிலான எச்சரிக்கை காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு அவசரநிலையையும் சமாளிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் பேரிடர்களைக் கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும், முழு மாவட்ட நிர்வாகத்தையும் தயார் நிலையில் வைத்திருக்கவும், தகுந்த ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், ஏதேனும் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தால், அவற்றை உடனடியாக இந்த அலுவலகத்திற்குத் தெரிவிக்குமாறும் மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


