பணியிடங்கள் விவரம்
1. உதவி பதிவாளர்: 2 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1). 13.01.26 அன்று வயது: 35க்குள். தகுதி: குறைந்தபட்சம் 55 சதவீத தேர்ச்சியுடன் முதுநிலை பட்டம் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி மற்றும் 5 ஆண்டுகள் கல்வி நிறுவனத்தில் நிர்வாக அனுபவம்.
2. இளநிலை உதவியாளர்: 17 இடங்கள் (பொது-4, எஸ்சி-1, எஸ்டி-2, ஒபிசி-6, பொருளாதார பிற்பட்டோர்-4). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 13.01.26 வயது: 27க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் அறிவு விரும்பத்தக்கது.
விண்ணப்ப கட்டணம்:உதவி பதிவாளர் பதவிக்கு: பொது மற்றும் ஓபிசியினருக்கு ரூ.1000/-, இளநிலை உதவியாளர் பணிக்கு பொது மற்றும் ஓபிசியினருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.iitg.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.01.2026.

