ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள இந்தியன் அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. உதவி நிர்வாக இன்ஜினியர் (சிவில்): 1 இடம் (பொது).
2. மருத்துவ அதிகாரி: 1 இடம் (பொது).
3. உதவி பதிவாளர்: 1 இடம் (பொது).சம்பளம்: ரூ.56,100.
4. நர்ஸ்: 1 இடம் (பொது).
5. தனி செயலாளர்: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.44,900.
6. கண்காணிப்பாளர்: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1).
7. தொழில்நுட்ப உதவியாளர் (ஐடி): 2 இடங்கள் (எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1).
8. தொழில்நுட்ப உதவியாளர் (உயிரியல்): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1)
9. இளநிலை நூலக கண்காணிப்பாளர்: 1 இடம் (பொது)
10. இளநிலை மொழிபெயர்ப்பாளர் (ராஜ்பாஷா): 1 இடம் (பொது)சம்பளம்: ரூ.35,400.
11. இளநிலை அலுவலக உதவியாளர் (பல்நோக்கு திறன்): 6 இடங்கள் (பொது-5, ஒபிசி-1). சம்பளம்: ரூ.25,500.
12. ஆய்வக உதவியாளர் (உயிரியல்): 1 இடம் (எஸ்சி).
13. ஆய்வக உதவியாளர் (வேதியியல்): 1 இடம் (ஒபிசி).
14. ஆய்வக உதவியாளர் (இயற்பியல்): 1 இடம் (பொது).
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, கட்டணம், தேர்வு முறை, கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களுக்கு www.iisertirupati.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.02.2026.

