தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏழுல மூணு தரலைன்னா ஏழரை ஆயிடும் ஆமாம்...! பாஜ டிமாண்ட்; அதிமுக ஷாக்

 

Advertisement

விருதுநகர் மாவட்டத்தின் 7 சட்டமன்ற தொகுதிகளில் 3 சட்டமன்ற தொகுதிகள் தங்களுக்கு வேண்டுமென பாஜ அடம் பிடித்து வருவது, அதிமுக தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் 170 தொகுதிகளில் அதிமுக நிற்க வேண்டும். மீதமுள்ள 64 சீட்டுகளை கூட்டணிக்கு பிரித்து வழங்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதில் பாஜ 40 சீட்டு வரை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் விருதுநகர் மாவட்டத்தின் 7 சட்டமன்ற தொகுதிகளில் 3 சட்டமன்ற தொகுதிகள் தங்களுக்கு வேண்டுமென கூறி வருகின்றனர். இது அதிமுக தலைமைக்கு கடும் நெருக்கடியைத் தந்திருக்கிறது. மாவட்டத்தில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளில் சாத்தூர் தொகுதியை பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியை பாஜ மாநில துணைத்தலைவரான கோபால்சாமிக்கும், விருதுநகர் தொகுதியை பாஜ கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கனுக்கும் கேட்டு அதிமுக தலைமைக்கு நெருக்கடி தரப்படுகிறதாம்.

பாஜ மாநிலத் தலைவர் என்பதால் சாத்தூர் தொகுதியை தவிர்க்க முடியாமல் நயினாருக்கு தர அதிமுக தலைமை ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் கோபால்சாமி தமக்கு நெருங்கிய நண்பர் என்பதால் அவருக்கும் கட்டாயம் ராஜபாளையம் வேண்டுமென அதிமுக தலைமைக்கு நயினார் நரேந்திரன் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

நண்பர் தனக்கு எப்படியாவது சீட்டை பெற்று தந்து விடுவார் என்ற நம்பிக்கையில் ராஜபாளையத்தில் பிரசாரத்தை துவக்கி விட்டார் கோபால்சாமி. 3 தொகுதிகள் நம்ம கையில் வந்து விடும். நம்பிக்கையோடு வேலை பாருங்க... என மாநில தலைமை தரப்பில் பாஜ நிர்வாகிகளுக்கு மறைமுகமாக கட்டளையிடப்பட்டுள்ளதாம். இதுகுறித்து சமீபத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சிலர் தங்களது குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.

கூட்டத்தில் பேசிய அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், மாஜி அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி விருதுநகரை எப்படியாவது அதிமுகவிற்கு பெற்று தந்து விடுவேன். ஆகவே நம்ம கட்சியை ஜெயிக்க வைக்கும் வேலைகளை பாருங்கள் என நிர்வாகிகளிடம் கூறியுள்ளது கூட்டணியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘நயினார் நாகேந்திரன் மற்றும் கோபால்சாமி இருவருமே அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டதால்தான், அதிமுகவிலிருந்து பாஜ கட்சிக்கு சென்றனர். கட்சி தலைமைக்கு துரோகம் செய்துவிட்டு மாற்றுக்கட்சிக்கு சென்றவர்கள். அவர்களுக்காக நாங்க தொகுதியை விட்டுத் தரணுமா? என்ன வேணும்னாலும் ஆகட்டும். ஒரு கை பார்க்கத் தான் போகிறோம்’’ என்றனர்.

 

Advertisement

Related News