மும்பை: முதலாவது ஐசிசி மகளிர் சாம்பியன்ஸ் டிராபி டி20 தொடர், இந்தியாவில் அடுத்த ஆண்டு (பிப்ரவரி 14-28) நடைபெறும் என ஐசிசி சேர்மன் ஜெய் ஷா அறிவித்துள்ளார். இலங்கைக்கு ஒதுக்கப்பட்டிருந்த தொடரை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பல்வேறு காரணங்களுக்காக நடத்த முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்ததை அடுத்து தங்கள் நாட்டில் நடத்த இந்தியா, தென் ஆப்ரிக்கா, வங்கதேச வாரியங்கள் விருப்பம் தெரிவித்திருந்தன. இந்த நிலையில், நேற்று முன்தினம் நடந்த ஐசிசி நிர்வாகக் குழு கூட்டத்தில், இத்தொடரை இந்தியாவில் நடத்துவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
முதலாவது தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, இலங்கை ஆகிய 6 அணிகள் பங்கேற்க உள்ளன. போட்டிகள் அனைத்தும் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் கிளப் வளாக மைதானம் மற்றும் வதோதரா சர்வதேச கிரிக்கெட் அரங்கத்தில் நடைபெறும். ரவுண்ட் ராபின் லீக் சுற்றின் முடிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பைனலில் பலப்பரீட்சை நடத்தும்.




