Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஐசிசி மகளிர் ஓடிஐ தரவரிசை ஸ்மிருதி மந்தனா மீண்டும் நம்பர் 1

லண்டன்: ஐசிசி மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, சமீபத்தில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்று 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடியது. அப்போது சிறப்பாக ஆடி ரன்களை குவித்த இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஐசிசி மகளிர் ஒரு நாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் 790 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த தென் ஆப்ரிக்கா வீராங்கனை லாரா உல்வார்ட் ஒரு நிலை தாழ்ந்து, 782 புள்ளிகளுடன் 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக ஆடிய ஆஸி வீராங்கனை பெத் மூனி 749 புள்ளிகளுடன், 2 நிலை உயர்ந்து 3ம் இடத்தையும், மற்றொரு ஆஸி வீராங்கனை ஆலிஸா ஹீலி, 744 புள்ளிகளுடன் 2 நிலை உயர்ந்து 4ம் இடத்தையும் பிடித்துள்ளனர். இருப்பினும் மற்றொரு ஆஸி வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர் 724 புள்ளிகளுடன் 2 நிலைகள் சரிந்து 5ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதேபோல், இங்கிலாந்து வீராங்கனை நாட் சிவர்பிரன்ட் 714 புள்ளிகளுடன் 2 நிலை தாழ்ந்து 6ம் இடத்துக்கு சென்றுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் அட்டகாசமாக ஆடிய ஆஸி வீராங்கனை போப் லிட்ச்பீல்ட் 674 புள்ளிகளுடன் 5 நிலைகள் உயர்ந்து 7ம் இடம் பிடித்து அசத்தியுள்ளார். இப்பட்டியலில் நியூசிலாந்தின் சோபி டிவைன் 8வது இடத்திலும், இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 4 நிலைகள் உயர்ந்து 9வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஹேலி மேத்யூஸ் 5 நிலைகள் உயர்ந்து 10ம் இடத்திலும் உள்ளனர். பட்டியலில் 9ம் இடத்தில் இருந்த இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ், 3 நிலை சரிந்து 12ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.