Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நான் ஒரு ராசியில்லா ராஜா!: தொடரும் சென்னையின் சோகம்

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி மிகவும் பரிதாபமான நிலையில் ஆடி வருகிறது. இதுவரை அதிக முறை கோப்பை வென்ற அணி என்ற பெருமையை பெற்றிருந்த அணியின் தற்போதைய நிலை ரசிகர்களை கவலை கொள்ள வைத்துள்ளது. ஐபிஎல் தொடரில் சென்னை அணி மிகக்குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைவதும் அந்த அணியின் ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது. ஐ.பி.எல். போட்டிகளில் குறைந்த ரன் வித்தியாசத்தில் சென்னை அணி 5 முறை வெற்றியை தவற விட்டுள்ளது. பெங்களூருவில் நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 213 ரன்கள் குவித்த நிலையில் வெற்றிக்காக போராடிய சென்னை அணி 5 விக்கெட்களை இழந்து 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனால் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதேபோல் 2019ஆம் ஆண்டில் பெங்களூரு அணிக்கு எதிராக 1 ரன் வித்தியாசத்திலும், அதே 2019ஆம் ஆண்டில் மும்பை அணிக்கு எதிராக 1 ரன் வித்தியாசத்திலும் சென்னை அணி தோற்றது. 2023ஆம் ஆண்டில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 3 ரன்கள் வித்தியாசத்திலும், 2018ஆம் ஆண்டில் பஞ்சாப் அணிக்கு எதிராக 4 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றியை தவற விட்டது. வெற்றியின் எல்லை வரை வந்து சென்னை அணி தோற்பது ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது.