Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஒண்ணுமே புரியல உலகத்துல...புலம்புகிறார் ஸ்கை!

சூரியகுமார் யாதவ்... 2025 ஆசிய கோப்பை, 2026 உலக கோப்பை டி20 தொடர்களில் இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்தி சாம்பியனாக்கிய கேப்டன். இன்று கேப்டன் பதவி மட்டுமல்ல, டி20 அணியில் தனது இடத்தையும் இழந்து நிற்கிறார். அவருக்கு பதிலாக பொறுப்பேற்ற ஷ்ரேயாஸ் அய்யர் வெற்றிகளைக் குவிக்க முடியாமல் தடுமாறி வரும் நிலையில், ஸ்கை கூறியதாவது:

என்ன நடந்தது... எப்படி நடந்தது என்று எதுவுமே புரியவில்லை. ஒலிம்பிக், அடுத்த டி20 உலக கோப்பை என அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அணியை எப்படி வழிநடத்துவது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த வேளையில், கேப்டன் பதவி பறிபோனதுடன் அணியில் இருந்தே நீக்கப்படுவேன் என்பதை கனவில் கூட நினைக்கவில்லை. ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடாதது இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கவில்லை.

நினைப்பது ஒன்று நடப்பது வேறு என்பதை உணர்ந்துவிட்டேன். எதுவும் நம் கையில் இல்லை. அவர்கள் பார்வையில் அது சரியான முடிவாக இருக்கும். எது எப்படியோ... மீண்டும் அணியில் இடம் பிடிப்பதற்காக முயற்சிப்பேன். இவ்வாறு சூரியகுமார் கூறியுள்ளார்.