Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

ஹூண்டாய் வெர்னா

ஹூண்டாய் இந்தியா நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட வெர்னா காரை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கார் இரண்டு வித இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கும். 1.5 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் 115எச்பி பவரையும், 144 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 160 எச்பி பவரையும் 253 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இரண்டு இன்ஜின்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டு அம்சமாக உள்ளது. டர்போ சார்ஜ்டு இன்ஜின் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வேரியண்டிலும் கிடைக்கும். 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் டரைவர் டிஸ்பிிளக்கள் இடம் பெற்றுள்ளன. டாப் வேரியண்டில் 7 ஏர்பேக்குகள் இடம் பெற்றிருக்கும். 360 டிகிரி கேமரா மற்றும் டேஷ்கேம் உள்ளது.

தோற்றத்தை பொறுத்தவரை புதிய பிளாக் குரோம் கிரில்கள், புரொஜெக்டர் எல்இடி ஹெட்லாம்ப்கள், மேம்படுத்தப்பட்ட பம்பர்கள், 16 அங்குல அலாய் வீல்கள் உள்ளன. டிரைவர் சீட்டில் மெமரி பங்ஷன் உள்ளது. கிளாசி புளூ மற்றும் டைட்டன் கிரே மேட்டி வண்ணங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த காரில் எச்எக்ஸ்2, எச்எக்ஸ்4, எச்எக்ஸ் 6, எச்எக்ஸ் 6 பிளஸ், எச்எக்ஸ் 8 மற்றும் எச்எக்ஸ் 10 ஆகிய வேரியண்ட்கள் உள்ளன. துவக்க வேரியண்டான பெட்ரோல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஷோரூம் விலை சுமார் ரூ.10.98 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் டாப் வேரியண்ட்டான எச்எக்ஸ் 8 சுமார் ரூ.14.88 லட்சம். பெட்ரோல் சிவிடியில் துவக்க வேரியண்ட்டான எச்எக்ஸ்6 சுமார் ரூ.14.40 லட்சம் எனவும், டாப் வேரியண்டான எச்எக்ஸ் 10 சுமார் ரூ.17.5 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டர்போ பெட்ரோல் வேரியண்டில் எச்எக்ஸ் 8 வேரிண்ட் மட்டுமே உள்ளது. இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.16.28 லட்சம். டர்போ பெட்ரோல் டிசிடி வேரியண்ட் துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.17.62 லட்சம். டாப் வேரியண்ட் சுமார் ரூ.18.25 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.