Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஹூண்டாய் அயோனிக் 5 பேஸ்லிப்ட்

ஹூண்டாய் நிறுவனம் அயோனிக் 5 என்ற பேஸ்லிப்ட் எலெக்ட்ரிக் காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 84 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு இந்த காரில் 72.6 கிலோவாட் அவர் பேட்டரி இருந்தது. இதன் மூலம் பேட்டரி திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள மோட்டார் அதிகபட்சமாக 229 எச்பி பவரையம், 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். டிசி அதிவேக சார்ஜிங் வசதி உள்ளது. இதன் மூலம் 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் அளவுக்கு 18 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம். 11 கிலோவாட் அவர் ஏசி சார்ஜராக இருந்தால் இதே அளவு சார்ஜ் செய்ய 7 மணி 35 நிமிடங்கள் ஆகும். முழுமையாக சார்ஜ் செய்தால் 690 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம் என நிறுவனத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 3.6 கிலோவாட் டூயல் சார்ஜிங் போர்ட்டுகள் உள்ளன. லேப்டாப், மொபைல் ஆகியவற்றை சார்ஜ் செய்து கொள்ளலாம். தோற்றத்தை பொறுத்தவரை ஏர்பிளாப், பம்பர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. முந்தைய மாடலை விட 20 எம்எம் நீளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறம் 12.3 அங்குல இன்போடெயின்மென்ட் டிஸ்பிளே மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இடம் பெற்றுள்ளன. 8 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம், பாதுகாப்பு அம்சமாக 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டயரில் காற்று அழுத்தத்தை அளவிடும் அமைப்பு, குழந்தைகளுக்கான சீட் மவுண்ட், லெவல் டூ அடாஸ் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ. 55.7 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.