ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், புதிய கிராண்ட் ஐ10 நியாஸ் வைப் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. இது ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் (ஓ) டிரிம்களில் கிடைக்கும். இந்தக் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் டம் பெற்றுள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்களில் கிடைக்கும். 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், குரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், புரொஜெக்டர் ஹெட்லாம்ப், பின்புற ஏசி வென்ட்கள் உள்ளன. ஸ்டாண்டர்டு அம்சமாக 6 ஏர்பேக்குகள் இடம் பெற்றுள்ளன. டாப் வேரியண்ட்டில், ஸ்மார்ட் கீ, டயரில் காற்று அழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்பு போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதுபோல், டேஷ் கேமில் டிரைவிங், எமர்ஜென்சி அல்லது நிகழ்வை பதிவு செய்தல், வெக்கேஷன் மோட், போட்டோ எடுத்தல் போன்ற வசதிகள் உள்ளன. இதற்கான பிரத்யேக மொபைல் ஆப்சை பயன்படுத்தி இவற்றை மேற்கொள்ளலாம். இந்த வசதி ஸ்டாண்டர்டு அம்சமாக உள்ளது. துவக்க வேரியண்டான ஸ்போர்ட்ஸ் வைப் மேனுவல் சுமார் ரூ.7.09 லட்சம், ஸ்போர்ட் வைப் ஆட்டோமேட்டிக் சுமார் ரூ.7.61 லட்சம், ஸ்போர்ட்ஸ் (ஓ) வைப் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் சுமார் ரூ.7.73 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
+


