ஹூண்டாய் நிறுவனம் புதிய எக்ஸ்டர் பேஸ்லிப்ட் காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் என்ஏ பெட்ரோல் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக், 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. மொத்தம் 7 வேரியண்ட்கள் உள்ளன. பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 83 பிஎஸ் பவரையும், 114 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். சிஎன்ஜியில் இயங்கும்போது 69 பிஎஸ் பவரையும் 95 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். எல்இடி டிஆர்எல்கள், 15 அங்குல டூயல் டோன் அலாய் வீல்கள், புதிய தோற்றத்தில் ஸ்பாய்லர்கள், அகலமான கிரில்கள், ஸ்டாண்டர்டு அம்சமாக 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிடி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், 45 வகையான மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் டாப் வேரியண்டில் உள்ளன. ஸ்டாண்டர்டு அம்சமாக அனைத்து வேரியண்டிலும் 30 பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.5,79,900 எனவும் டாப் வேரியண்ட் விலை சுமார் ரூ.9,40,900 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement
