ஜெஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் நிறுவனம், நடப்பு ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டிருந்தது. இந்த கார்கள் மகாராஷ்டிராவில் அசெம்ப்ளிங் செய்யப்பட உள்ளன. ஆனால், காரை அறிமுகம் செய்வது மேலும் தாமதம் ஆகலாம் என, ஜெஎஸ்டபிள்யூ குழுமத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு அசெம்ப்ளிங் செய்யப்பட உள்ளது. குறிப்பாக விண்ட் ஷீல்டு, சன்ரூப் ஆகியவை இறக்குமதி செய்யப்பட வேண்டும். ஆனால், சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி இன்னும் கிடைக்காததே இந்த தாமதத்துக்கு காரணம் என ஒன்றிய அரசுக்கு எழுதிய கடிதத்தில் சஜ்ஜன் ஜிண்டால் குறிப்பிட்டுள்ளார்.
+
Advertisement

