செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த குப்பநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுண்டி (27). இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான அருண்குமார் (17) மற்றும் ஹரிஷ், சிலம்பு ஆகியோருடன் நேற்றுமுன்தினம் இரவு வனப்பகுதிக்கு விலங்குகளை வேட்டையாடுவதற்காக சென்றுள்ளார்.
அப்போது, வனப்பகுதிக்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் பயிர்களை காட்டுப் பன்றிகளிடம் இருந்து பாதுகாக்க அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி சாமுண்டி, அருண்குமார் பலியாகினர். இதை மறைக்க இருவரின் சடலங்கள் அருகில் உள்ள கிணற்றில் வீசப்பட்டதாக தெரிகிறது.
