Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

இழிவுபடுத்தியும் இலைத் தலை மவுனம் காப்பதின் மர்மத்தை விளக்குகிறார்: wiki யானந்தா

‘‘புதிதாக அரசியலில் குதித்து ஆட்டம் காட்டும் பிரதிநிதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க புது தலைவர்கள் விசிட் அடிக்கப்போறாங்களாமே..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.

‘‘தெற்கு யூனியனான புதுச்சேரியில் புல்லட்சாமி பிடிகொடுக்காமல் நழுவுவதால் கூட்டணி குழப்பத்தில் தாமரை கட்சி உள்ளதாம்.. மத இயக்க பின்னணியுடன் சிறுபான்மை ஓட்டுகளை சிதறடிக்க திரைமறைவு வேலைகள் சைலண்ட்டாக துவக்கப்பட்டு இருக்கிறதாம்.. புதிதாக அரசியலில் குதித்துள்ள லாட்டரி அதிபரின் மகனோ, யூனியனில் நான்தான் அடுத்த இளவரசர் என கூறி வருகிறாராம்.. தற்போது புதிய வரவாக தாடி நடிகர் உள்ளே நுழைய பெருமகிழ்ச்சியில் உள்ளாராம்.. ஆனால் தாமரை கட்சியோ தனது இருப்பை தக்கவைக்க முடியாமல் திணறி வருகிறதாம்.. ஏற்கனவே 2, 3 மக்கள் பிரதிநிதிகள் இளவரசரோடு சுற்றிவரும் நிலையில், மந்திரி பதவியை சமீபத்தில் துறந்தவரோ நான் விஜய நடிகரின் தீவிர ரசிகன் என திடீர் ஷாக் கொடுத்தாராம்.. அண்ணா, காமராஜர் போல விஜயமானவரும் தலைவராக வளர வேண்டுமென்ற விருப்பத்தையும் கூறினாராம்.. இதனால் தனது பிரதிநிதிகள் என்னென்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதையே பல்ஸ் பார்க்க முடியாமல் தாமரை மேலிட பொறுப்புகள் திணறி வருகிறதாம்.. இவர்களின் ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க விரைவில் புது தலைகள் யூனியனுக்கு விசிட் அடிக்க உள்ளார்களாம்.. இதுபற்றிதான் யூனியன் அரசியலில் பரவலாக பேச்சு..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நடிகர் கட்சி தங்கள் கூட்டணிக்கு வராம போனா சிபிஐ மூலமா குண்டு ஒன்றை வீச மலராத கட்சி ரெடியா இருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘எல்லோரும் சந்தைக்கு போறாங்க, நானும் போறேன்னு பையை எடுத்துக்கிட்டு நரியும் சந்தைக்கு போச்சுதாம்.. அதே போலவே புதிதாக கட்சி தொடங்கிய நடிகரு பொதுக்கூட்டமுன்னா என்னன்னே தெரியாத வகையில் கரூருக்கு போனார்.. நண்பகல் 12 மணிக்கு வந்திடுவேன்னு சொல்லிப்புட்டு, இரவு 7 மணிக்கு போனார்.. பச்ச தண்ணி கூட இல்லாததால் கூட்டத்துக்கு வந்த ரசிகர்கள் மூச்சு திணறி போயிட்டாங்க.. அதே நேரத்துல போலீசாரின் அறிவுரையை மீறி, பஸ்சை உருட்டிக்கிட்டே சென்று கூட்டத்தின் நடுவில் நிறுத்தியே ஆவேன்னு அடம் பிடிச்சாராம் நடிகர்.. இதன்காரணமாக 41 பேர் இறந்தனர்.

வீட்டைவிட்டு வெளியே வராமல் பதுங்கியிருந்த அந்த நடிகரு, திடீரென ஈரோட்டுக்கு வந்திருக்காரு.. அதுவும் நிர்வாகிகளை மேடை ஏற்றாமல் தன்னந்தனியாக நின்று போஸ் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் இலைக்கட்சியே இல்லைன்னு ஒரு போடுபோட்டுட்டு போயிட்டாராம்.. இதனை கேட்டதும் இலைக்கட்சியின் ரத்தத்தின் ரத்தங்கள் கொந்தளிச்சிக்கிட்டு இருக்காங்களாம்.. ஆனால் தன்னை ஒரு வீராதி வீரன் என சொல்லிக்கிட்டிருக்கும் இலைக்கட்சி தலைவர் பெட்டிப்பாம்பாய் அடங்கி போய்கிடப்பதாக கட்சிக்காரங்க வேதனையோடு சொல்றாங்க.. 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்ட கட்சியை பார்த்து இழிவாக பேசியும் இலைக்கட்சி தலைவர் ஏன் வாயை திறக்கவில்லை எனவும் விம்முறாங்களாம்.. இதற்கு இன்னொரு காரணமும் இருக்குதாம்.. ஆரம்பத்தில் இருந்தே அந்த நடிகரை எப்படியாவது கூட்டணிக்குள் இழுத்துப்போட்டு சிஎம் ஆகிடணுமுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருந்தாராம் இலைக்கட்சி தலைவர்.. பிள்ளையார்சுழி போட்டாச்சின்னு சொல்லிப்பார்த்தும் நடிகர் சீண்டலையாம்.. இலைக்கட்சி தலைவரை ஒரு பொருட்டாகவே அவர் நினைக்கலையாம்.. கடைசி நேரத்திலாவது தன்னோட சேர்ந்திட மாட்டாரா என்ற ஏக்கத்தில் இருப்பதால் தான் வாய்திறக்க மறுப்பதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. இந்த சொரணை இல்லாத தலைவர் இருக்கும்வரை இலைக்கட்சி துளிர்க்கவே துளிர்க்காதுன்னு வாய்விட்டு பேசுறாங்களாம்.. ஆனால் தங்களின் கூட்டணிக்கு வராமல் போனால் கடைசிநேரத்தில் சிபிஐ மூலமாக குண்டு ஒன்றை வீச மலராத கட்சி, திட்டம் ஒன்றை வச்சிருக்காம்.. கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்கு நடிகர் தான் காரணம் என உலகம் முழுக்க இருக்கும் மக்களுக்கு தெரிந்திருந்தாலும் அதுதான் உண்மையென பிப்ரவரியில வெளிப்படுத்தபோறாங்களாம்.. இதனால கடைசி நேரத்திலாவது அவர் வந்திட மாட்டாரா என்ற ஏக்கத்தில் தான் வாய்திறக்காமல் இருக்காராம் இலைக்கட்சி தலைவர்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘காரில் இருந்து டூவீலரில் பயணித்த அதிகாரி மீண்டும் ரெட் லைட் காரில் உலா வருவதால் யூனியன் ஆளும்தரப்பு அச்சத்தில் இருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘டெல்லி அதிகார படை கோலோச்சும் தென் யூனியனாக புதுச்சேரி உள்ளதாம்.. தமிழகத்தில் மாவட்டத்துக்கு கூட ஒப்பிட முடியாத யூனியனில் இத்தனை மத்திய ஐபிஎஸ், ஐஏஎஸ்களா என சுற்றுலாவாசிகளே வாயடைத்து நிற்கும் நிலை தொடர்கிறதாம்.. நிலைமை இப்படியிருக்க மாநில பிசிஎஸ், பிபிஎஸ் அதிகாரிகள் சிலர் ஆளும் தரப்பு செல்லப்பிள்ளையாக உலாவினார்களாம்.. இதை மோப்பம் பிடித்த டெல்லி அதிகார ஆளுமைகள் கலால் துறையில் நீண்டநாளாக கோலோச்சியிருந்த புல்லட்சாமி ஆதரவு அதிகாரி சுதாவை டம்மி ஆக்கினார்களாம்.. இதனால் காரில் வலம் வந்தவர் டூவீலரில் பயணிக்கும் சூழல் உருவாக இரு வருஷமாக இருந்த இடமே தெரியாத நிலையில் கிடந்தாராம்.. தேர்தல் துறையால் அதிகாரிகள் இடமாற்றம் அவசியமாக சுதாவுக்கு மீண்டும் ‘பம்பர்’ அடித்துள்ளதாம்.. விளையாட்டு இயக்குநரோடு, மாவட்ட கூடுதல் கலெக்டர் என்ற புதிய பதவி உருவாக்கி கொடுக்கப்பட்டதாம்.. இதனால் மீண்டும் ரெட் லைட் காரில் சுதந்திரமாக நகரில் உலாவுகிறாராம்.. இவரது பந்தா விளையாட்டு தேர்தலில் எதிர்வினை ஆற்றலாம் என்பதால் ஆளும் தரப்பு அச்சத்தில் உள்ளதாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.