Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொதுத்துறை நிறுவனத்தில் அப்ரன்டிஸ்

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்பிசிஎல் நிறுவனத்தில் பி.இ., பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் ஒரு வருட அப்ரன்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

மொத்த காலியிடங்கள்: 612.

தகுதி: சிவில்/மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். 1.4.2023 தேதிக்கு பின்னர் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

வயது: 25க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

பயிற்சியின் போது மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

www.jobs.hpcl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.03.2026.