பனாஜி: திருமணத் தயார் நிலை குறித்த புதிய சான்றிதழ் பாடத்திட்டத்தை கோவா கல்லூரி அறிமுகம் செய்துள்ளது. கோவாவில் உள்ள ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மனித மேம்பாடு மற்றும் குடும்ப ஆய்வுகள் துறையானது திருமணத் தயார் நிலை, ஆரோக்கியமான மற்றும் நீடித்த உறவுகளுக்கான தயாரிப்பு என்ற புதிய சான்றிதழ் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சான்றிதழ் பாடத்திட்டத்திற்கான வகுப்பு 2026ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி முதல் 17ம் தேதி வரை 15 நாட்கள் நடைபெறும். திருமண தயார் நிலை என்பது வெறும் திருமணச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை மட்டும் குறிப்பதல்ல. அதற்குப் புரிதல், அர்ப்பணிப்பு மற்றும் திருமண வாழ்க்கையின் பொறுப்புகளை உணர்ந்து கொள்ளுதல் மற்றும் ஆரோக்கியமான நீடித்த உறவை உருவாக்குவதற்கு தேவையான அம்சங்களை அறிந்து கொள்வதற்கு இந்த பாடத்திட்டம் உதவும் என்று கல்லூரி முதல் மகேஷ் தெரிவித்துள்ளார்.
+
Advertisement


