ஓட்டல்களுக்கு மதிப்பீடு வழங்கினால் பணம் தருவதாக கூறி பட்டதாரி வாலிபரிடம் ரூ.7.31 லட்சம் அபேஸ்: 2 பேர் கைது
அதன்படி, நான் முதலில் மதப்பீடு செய்தபோது, அதற்கான கமிஷனர் ரூ.959 எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. பிறகு தொடர்பு கொண்ட அந்த நபர், எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக கமிஷன் தருவதாக கூறினார். அதன்படி ரூ.8 ஆயிரம் செலுத்தியதும், அதற்கான கமிஷனாக ரூ.15,917 எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதன்பிறகு பல்வேறு காரணங்கள் கூறி மொத்தம் 7,31,166 ரூபாயை அவர் கூறிய பல்வேறு வங்கி கணக்கில் செலுத்தினேன்.
பிறகு கமிஷன் உட்பட மொத்தம் ரூ.10.90 லட்சம் எனது வங்கி கணக்கில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அந்த பணத்தை என்னால் எடுக்க முடியவில்லை. பிறகு அந்த பணத்தை எடுப்பது குறித்து கேட்தற்கு மேலும், ரூ.5.45 லட்சம் செலுத்தினால் முழு பணமும் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்தனர். அதன் பிறகு இது மோசடி என தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து எனது பணத்தை பெற்று தர வேண்டும்.
இவ்வாறு தெரிவித்து இருந்தார். இதுகுறித்து மாநில சைபர் க்ரைம் உயர் அதிகாரிகள், பணம் அனுப்பட்ட வங்கி கணக்கு விவரங்களை வைத்து விசாரணை நடத்திய போது, தருமபுரி பகுதியில் உள்ள 5 வங்கி கணக்குகளில் பணம் வரவு வைக்கப்பட்டது தெரியவந்தது. உடனே மோசடியில் ஈடுபட்ட தருமபுரியை சேர்ந்த செல்வக்குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த திருவாரூரை சேர்ந்த கவுதம்குமார் அகிய 2 பேரை கைது செய்தனர்.