Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சரத்பவார்: ஓய்வெடுக்குமாறு பிரதமர் மோடி அறிவுரை

புனே: உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரத் பவார் நேற்று வீடு திரும்பினார். தேசியவாத சரத் சந்திர பவார் கட்சி தலைவர் சரத் பவார்(85). இவருக்கு கடந்த 2ம் தேதி தொடர் இருமல் காரணமாக நெஞ்சு வலி ஏற்பட்டதால் புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரத் பவாரின் உடல் நிலை சீராகி வருவதாக மருத்துவர்கள் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சரத் பவார் நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இதையடுத்து சரத் பவாரை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதுகுறித்து சரத் பவாரின் உதவியாளர் விட்டல் மனியார் கூறுகையில், “பிரதமர் மோடி சரத் பவாரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது, சுப்ரியா சுலேவும், மற்றவர்களும் நாட்டை பார்த்து கொள்வார்கள். எனவே, நீங்கள் முழு ஓய்வெடுக்க வேண்டும் என பிரதமர் அவரிடம் கூறினார்.