ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் கார் பாரத் பரிசோதனையில் 5 ஸ்டார் பெற்றது!
ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் கார் பாரத் வாகன தர பரிசோதனையில் ஒட்டுமொத்த அளவில் 5 ஸ்டார் பெற்றுள்ளது. இது, 5 ஸ்டார் பெற்ற இந்த நிறுவனத்தின் 2வது செடான் காராகும். அமேஸ் கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பு அம்சத்தில் 5 ஸ்டார் பெற்றுள்ளது. அதாவது 32 புள்ளிகளுக்கு 28.33 பெற்றுள்ளது. சிறியவர்களுக்கான பாதுகாப்பு அம்சத்தில் 4 ஸ்டாரும், அதாவது 49 புள்ளிகளுக்கு 40.81 புள்ளிகளும் பெற்றுள்ளது. இந்த காரில் 6 ஏர் பேக்குகள், ஐஎஸ்ஓஎப்ஐஎக்ஸ் சைல்டு சீட் ஆங்கர்கள், சீட் பெல்ட் ரிமைண்டர்கள் ஸ்டாண்டர்டு அம்சங்களாக இடம் பெற்றுள்ளன. இதுதவிர, ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் கேமரா ஆகிய பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.
Advertisement
Advertisement