ஹோண்டா கார்ஸ் நிறுவனம், புதிய இசட்ஆர்-வி என்ற காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ள 2.0 லிட்டர் இன்ஜின் திறன் கொண்ட முதல் ஹைபிரிட் எஸ்யுவி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 2.0 லிட்டர் இ-எச்இவி இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 141 பிஎச்பி பவரையும், 186 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைந்து 181 பிஎச்பி பவரையும், 315 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 7.9 நொடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும். ஒரு லிட்டருக்கு 22.8 மைலேஜ் கிடைக்கும் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் இந்தக் காரில் ஏபிஎஸ், 8 ஏர்பேக்குகள், லெவல் 2 அடாஸ் கொண்ட ஹோண்டா சென்சிங் பாதுகாப்பு அம்சம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டெசன்ட் கண்ட்ரோல் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. விலை விவரம் தெரிவிக்கப்படவில்லை. காருக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜூலை மாதம் முதல் டெலிவரி செய்யப்படும் என நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது.


