Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஹோண்டா என்எக்ஸ் 500

ஹோண்டா நிறுவனம், என்எக்ஸ் 500 என்ற புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 471 சிசி டிவின் சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 47 எச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 43 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. இ-கிளட்ச் தொழில் நுட்பம் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் கிளட்சை பிடிக்காமலேயே கியர் மாற்ற முடியும். முன்பக்கம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறம் மோனோ ஷாக் அப்சர்வர்கள், டூயல் சானல் ஏபிஎஸ், டிராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 5 அங்குல டிஎப்டி டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது. ஷோரூம் விலை சுமார் ரூ.7.44 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இ-கிளட்ச் தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளதால் பைக்கின் விலை சாதாரண கிளட்ச் மாடலை விட சுமார் ரூ.1.11 லட்சம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.