ஹோண்டா நிறுவனம், ஹோண்டா சிட்டி பேஸ்லிப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் காரில் 1.5 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 121 எச்பி பவரையம், 145 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. ஹைபிரிட் வேரியண்டும் உள்ளது. இதில் 1.5 லிட்டர் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் இடம் பெற்றிருக்கும். இந்த இரண்டும் இணைந்து அதிகபட்சமாக 126 எச்பி பவரையும், 253 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஹைபிரிட் வேரியண்ட் ஒரு லிட்டருக்கு 27.26 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதில் புதிய அம்சமாக, 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் இடம் பெற்றுள்ளது. இதுஏபால் சன்ரூப், வயர்லெஸ் போன் சார்ஜர், முன்புற வென்டிலேட் சீட்கள், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்டிங், 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அசிஸ்ட், அடாஸ் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
இந்தக் காரில் எஸ்வி, வி, இசட்எக்ஸ், இசட்எக்ஸ் பிளஸ் ஆகிய வேரியண்ட்கள் உள்ளன. துவக்க வேரியண்டான எஸ்வி மேனுவல் டிரான்ஸ்மிஷன் துவக்க விலை சுமார் ரூ.11,99,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டிக் வேரியண்ட் எஸ்வி-யில் இல்லை. வி வேரியண்டில் இருந்துதான் தொடங்குகிறது. இதன் துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.14,29,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் டாப் வேரியண்ட் சுமார் ரூ.17,14,900. இ-எச்இவி இசட்எக்ஸ் பிளஸ் வேரியண்ட்டில் மட்டும் உள்ளது. இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.20,99,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
