தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தி கற்பதை தடுக்கவில்லை; திணிக்காதீர்கள்.. இந்தி கற்க முயன்றபோது கேலி செய்யப்பட்டதாக நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு திமுக கண்டனம்.!!

Advertisement

டெல்லி: சிறுவயதில் இந்தி கற்க முயன்றபோது தமிழக வீதிகளில் தாம் கேலி செய்யப்பட்டதாக மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார். மக்களவையில் வங்கிகள் சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்திற்கு பதில் உரை வழங்கி அவர் உரையாற்றினார். அப்போது அவரது இந்தி பேச்சில் பிழை இருப்பதாக கூறி இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் சுட்டிக்காட்டினர். அதற்கு பதில் அளித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்;

தமிழகத்தில் இந்தி கற்க விரும்பியதற்காக நான் கேலி செய்யப்பட்டேன். நீங்கள் தமிழ்நாட்டில் வசிக்கிறீர்கள், வட இந்திய மொழியான இந்தியைக் கற்க விரும்புகிறீர்களா?' என்று என்னிடம் கேட்கப்பட்டது. இந்த வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் எதிரொலிக்கின்றன என்று அவர் கூறினார். தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி அல்லவா? எனவே நான் இந்தி கற்றுக்கொள்வதில் என்ன தவறு? என்று கேள்வி எழுப்பிய அவர், இந்தி திணிப்பை எதிர்ப்பது நல்லது, ஆனால் அதைக் கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு ஏன் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்?என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது அவரது குற்றச்சாட்டை தூத்துக்குடி எம்.பி கனிமொழி மறுத்துள்ள நிலையில், அவரது பேச்சுக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அப்போது அவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் இந்தி கற்பதை நாங்கள் எதிர்க்கவில்லை; இந்தி திணிப்பை மட்டுமே நாங்கள் எதிர்ப்பதாகவும் முழக்கங்களை எழுப்பினர். மேலும், தமிழ்நாட்டில் யாரும் இந்தி கற்றுக்கொள்வதை நாங்கள்

தடுக்கவில்லை; இந்தியை திணிக்காதீர்கள் என்பதுதான் எங்களது நிலைப்பாடு என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். நாங்கள் யாரையும் கிண்டல் செய்ய வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் பேட்டியளித்தார்.

Advertisement