Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இமாச்சலப் பிரதேசத்தில் 5.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தரம்சாலா: இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா - சம்பா எல்லைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மிதமான தீவிரம்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆகப் பதிவாகியுள்ளது. இதனால் காங்க்ரா, சம்பா மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் பலத்த அதிர்வுகள் உணரப்பட்டன.

இரவு 10:04 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், தரம்சாலாவில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காங்க்ரா மாவட்டத்தின் 'தார் கோடோய்' (Dhar Godoi) பகுதியை மையமாகக் கொண்டு உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்த தரம்சாலா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், அச்சமடைந்து தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். எனினும், இந்த நிலநடுக்கத்தால் மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் உயிர்ச்சேதமோ அல்லது சொத்துச் சேதமோ ஏற்படவில்லை.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகரிலும் எதிரொலித்தது.