சேலம்: நடப்பு மாதத்திற்கான (செப்டம்பர்) காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு நேற்று காலை வெளியிட்டது. இதில் 1வர்த்தக காஸ் சிலிண்டர் விலை திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.9.50 முதல் ரூ.11.50 வரை உயர்ந்துள்ளது. சென்னை மற்றும் சேலத்தில் தலா ரூ.10.50 விலை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த மாதம் சென்னையில் ரூ.2,906 ஆக இருந்த வர்த்தக சிலிண்டர் நேற்று ரூ.10.50 விலை உயர்ந்து ரூ.2,916.50 ஆகவும், சேலத்தில் ரூ.2,854.50 ஆக இருந்தது, ரூ.10.50 விலை உயர்ந்து ரூ.2,865 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெல்லியை பொறுத்தவரை ரூ.9.50 விலை உயர்ந்து, ரூ.2,747.50 எனவும், கொல்கத்தாவில் ரூ.11.50 விலை உயர்ந்து ரூ.2,884 எனவும், மும்பையில் ரூ.9.50 உயர்ந்து ரூ.2,701 எனவும் அதிகரித்துள்ளது. அதேசமயம் தொடர்ந்து 3வது மாதமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைக்கப்படவில்லை.



