குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க ரூ.250 கோடி: நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.21,524 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை: பேரையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மாநில நெடுஞ்சாலைகளை நான்கு வழி சாலைகளாக அகலப்படுத்துதல், புறவழி சாலைகள் அமைத்தல், சாலை பாதுகாப்பு, நடைமேம்பாலம், ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை இதர மாவட்ட சாலைகளாக தர உயர்த்தல், பாலங்கள், ஓடுதள ேமம்பாடடு திட்டம் ஆகியவை அடங்கும்.
தமிழகத்தில் உள்ள பல சாலைகள் போதிய பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக இருப்பதால் அந்த சாலைகளில் பயணிப்பது ஒரு சவாலாகவே உள்ளது. இச்சாலைகளை சீரமைக்க திருத்த வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளில் ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்த திட்ட மதிப்பீடுகளில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.21,524 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
